மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற தன்னையும் தன் கணவரையும் தடுத்து நிறுத்திய கோவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் , நாங்கள் இந்துக்கள் தான் என்பதற்கான சான்றிதழ்கள் காட்டும்படி கூறினார் என்ற நடிகை நமிதாவின் குற்றச்சாட்டிற்கு , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது .
கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவதற்காக இன்று காலை மதுரையில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நடிகை நமீதா தனது கணவருடன் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரி ஒருவர் தன்னிடமும், தனது கணவரிடமும் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சமூக வலைதளத்தில் குற்றசாட்டை ஒன்றை முன்வைத்தார் .

மேலும் அவரது குற்றச்சாட்டில் அந்த காவல் அதிகாரி , மதம் குறித்த விசாரணைக்கு பிறகு தங்களது சாதி தொடர்பான ஆதாரங்களை கேட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், பல ஆண்டுகாலமாக மீனாட்சி அம்மன் கோயிலின் தெப்பக்குளத்தை தாண்டி ஒரு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
அதில் இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் அனுமதிப்பது இல்லை என தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. பிரபலங்கள் கோயிலுக்கு வரும்போது, சந்தேகம் இருந்தால் கோயில் பணியாளர்கள், அவர்கள் சார்ந்த மதம் குறித்து கேட்பது உண்டு.

அந்த வகையில், பணியில் இருந்த பொறுப்பு அதிகாரி, நடிகை நமீதாவிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர் கணவர் இந்து, இந்து முறைப்படி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டோம் என நமீத தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் VIP தரிசனம் முடித்து சென்றனர் . முக்கிய பிரபலங்கள் மற்றும் வெளிநாட்டினர் வரும்போது விசாரிப்பது வழக்கமான நடைமுறையே என கோயில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது .
Leave a Reply
You must be logged in to post a comment.