மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 1-ந் தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடக்கிறது. மே 3-ந் தேதியன்று மாலை 6 மணியில் இருந்து 7.10 மணிக்குள் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு மதுரை வருகிறார்.
இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மே 5-ந்தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி பெரும் விமரசியாக நடைபெறவுள்ளது . இந்த நிகழ்ச்சியில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடக்க உள்ளது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து ஆண்டுதோறும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழாவின் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்விற்காக ஏப்ரல் 30-ம் தேதி முதல் 6 நாட்களுக்கு வைகை அணியில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. அணையில் தண்ணீர் இருப்பை பொருத்து தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.