மதுரை மாட்டத்தில் ஒரு நாள் மழைக்கே தாங்காத மதுரை தத்தளிக்கிறது .வடகிழக்கு பருவமழை தொடர்வதற்கு முன்பாகவே நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக, கார், இருசக்கர வாகனங்களை மூழ்கடிக்கும் அளவிலே சாலைகளில் தண்ணீர் ஓடியதால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் திரும்ப முடியாமல் பலரது வாகனங்கள் தண்ணீரிலே மூழ்கி செயலிழந்தது.அதற்கு சாட்சியாக சிலர் வாகனத்துடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்றது.
மதுரையின் மையப் பகுதியான சிம்மக்கல்,பழங்காநத்தம், டிவிஎஸ் நகர் ,மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகள்,செல்லூர், தமுக்கம், புதூர் போன்ற பகுதிகளில் சாலைகளில் மழைநீர் ஆறு ஓடுவது போல் காட்சி அளித்தது.ஒரு நாள் மழைக்கே கோவில் மாநகர் மதுரை தாங்கவில்லை என்று இன்றைக்கு மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

அனைத்து வாகனங்களும் தண்ணீர் சிக்கிய காட்சிகள் தலைப்புச் செய்தியாக உள்ளது.மழைநீர் வடிகாலை முறைப்படுத்தி , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைகையாற்றின் வரத்து கால்வாய்கள், கண்மாய்கள், குளங்களை தூர்வாரி தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் சோழவந்தான் பகுதியில் வீடு இடிந்தது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் ஆய்வு கூட்டத்தை ஏற்கனவே நடத்தியுள்ளார். அது குறித்து என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்?
எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது அனைத்து வருவாய் மாவட்டங்களில் மழைக்காலங்களுக்கு முன்பாக நீர்வரத்து பகுதிகளில் தூர்வாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் பெய்யும். இதில் நமக்கு ஏறத்தாழ 45 சதவீதத்திற்கு மேல் குடிநீராகவும், விவசாயத்திற்காகவும் தண்ணீர் கிடைக்கக்கூடிய பருவ காலம், இந்த வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஒரு நாள் மழைக்கு மதுரை தாங்கவில்லை.
நான் பல்வேறு இடங்களில் நேரில் சென்று பார்த்தேன் சாலைகள் எல்லாம் குண்டும் குழியாக உள்ளது. தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளது. அரசு செயல்படுகிறதா என்று தெரியவில்லை. எடப்பாடியார் முதலமைச்சராக இருக்கும் பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து நீர்வரத்து கால்வாயை செம்மைப்படுத்துவார். இதற்காக தனி கவனம் செலுத்துவார் தற்பொழுது அந்த தனி கவனம் இல்லை என்பதற்கு அத்தாட்சியாக மதுரை தத்தளிக்கிறது.

சாலைகள் எல்லாம் சீர் செய்ய வேண்டும். அதேபோல் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாவட்ட அமைச்சர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.ஒரே நாள் மழைக்கு மதுரை தத்தளித்துள்ளது.இந்த ஆண்டு அதிகமாக வடகிழக்கு பருவமழை இருப்பதாக கூட வானிலை ஆய்வு மையங்களுடைய கருத்துக்கள் சொல்லப்படுகிறது வானிலை ஆராய்ச்சியின் எச்சரிக்கையை நாம் கவனிக்க வேண்டும்.
செயல்படாத முதலமைச்சராக இருக்கும் முதலமைச்சர் இன்றைக்கு, ஒரு நாள் மழைக்கு சாலையில் ஆறுகள் போல ஓடும் தண்ணீரை சரி செய்ய உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பாரா? அதேபோல் மாவட்ட அமைச்சர்கள் போர்க்கால நடவடிக்கை எடுத்திட ஆய்வு கூட்டத்தை நடத்த முன்வருவார்களா? எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.