- பழனி அடிவாரம் பாத விநாயகர் கோவிலில் தொடங்கி கிரிவல பாதை வழியாக சென்று சண்முகா நதியில் கரைப்பதற்கு வருகிற 13 ம் தேதி விநாயகர் ஊர்வலத்திறுகு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம் பழனி , சக்தி சங்கமம் சார்பில் ஸ்ரீதர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
நான்சக்தி சங்கமம் என்ற அமைப்பின் உறுப்பினராக உள்ளேன் நாங்கள் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவினை நடத்தி வருகிறோம் .
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலமானது பழனி அடிவாரம் பாதவிநாயகர் திருக்கோவிலில் சம்பர்தாய முறைப்படி பூஜைகள் முடித்து விட்டு அங்கிருந்து விநாயகர் சிலை ஊர்வலமான தொடங்கி
கிரிவல பாதை வழியாக சுற்றி இறுதியில் சண்முகா நதியில் விநாயகர் சிலை கரைப்பது வழக்கம் .
எனவே இந்த. ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலத்தை வருகிற 13.09.2024 முதல் 14.09.2024 வரை பழனி அடிவாரம் பாத விநாயகர் கோவிலில் தொடங்கி கிரிவல பாதை வழியாக சென்று சண்முகா நதியில் கரைப்பதற்கு அனுமதி அளித்தும் அதற்கான உரிய பாதுகாப்பையும் வழங்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ண குமார், நீதிபதி விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,மனுதாரர் பழநியில் அனுமதி கோரி புதிதாக , பழநி டி எஸ் பி யிடம் மனு அளிக்க வேண்டும்.
மனுவின் அடிப்படையில்விதிமுறைகளை வகுத்து, 12 ம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும். பழநி கிரி வல பாதையில் ஏற்கனவே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே கிரிவல பாதையில் வாகனங்களில் கொண்டு செல்ல கூடாது என வருகிற 13 ம் தேதி மாலை அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.