மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலை திறக்க உத்தரவிடக் கோரியதை சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.!

1 Min Read
மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில்

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலை திறக்க உத்தரவிடக் கோரியதை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.


மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை அனுமதிக்கவில்லை, என சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி விழுப்புரம் மாவட்ட வருவாய் கோட்ட அதிகாரியின் உத்தரவின் பேரில் இந்த மாதம் ஏழாம் தேதி அந்த கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.


அந்த கோயிலை திறந்து தினசரி பூஜை, சடங்குகள் நடத்த அரசுக்கு உத்தரவிடக்கோரி விழுப்புரம் மாவட்டம் கரிப்பாளையத்தை சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் குறிப்பிட்டு இருந்த அந்த மனுவில், கோயிலுக்குள் செல்ல குறிப்பிட்ட பிரிவினருக்கு அனுமதி மறுக்கவில்லை, தீண்டாமை பின்பற்றப்படவில்லை, கொரோனாவின் போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் கூட கோயிலில் பூஜை நடந்தன.

தற்போது பூஜை, அபிஷேகம் நடத்தப்பட வேண்டும். சீல் வைப்பதை தவிர்த்து இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை சரியாக கையாள தெரியாமல் தவறுதலாக சீல் வைத்துள்ளனர். இதனால் தினசரி பூஜை நடத்த முடியவில்லை என கூறியுள்ளார்.


இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ் வி கங்காபுர் வாலா நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் கோவில் திருவிழாவில் குறிப்பிட்ட பிரிவினரை வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது. கோயிலுக்கு தக்கார் நியமிக்கப்பட்டும் அவரால் பொறுப்பேற்க முடியவில்லை. இந்த பிரச்சனை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. என்றார். இதையடுத்து இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணை நடப்பதால் அறநிலைத்துறையை அணுகும்படி மனுதாரருக்கு முதல் பெஞ்ச் அறிவுறுத்தியது. மனுதாரரின் விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்கும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை முடித்து வைத்தது.

Share This Article

Leave a Reply