சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு : மதுபானங்களை அதிக விலைக்கு விற்கும் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யும் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு…

1 Min Read
  • மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மட்டுமல்லாமல் அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்வது தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்த வழக்கில், டாஸ்மாக் நிர்வாகத்தின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 24 ஆயிரத்து 986 ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படாத நிலையில் தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறுக்கு அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்வது என்பது சட்ட விரோதமானது என கூறப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

காலணி ஆதிக்கத்தில் தான் இதுபோல தனிப்பட்ட நபர்களின் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக தண்டனைகள் விதிக்கப்பட்டதாகவும், அனைவருக்கும் தண்டனை விதிப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்பதால் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, சட்ட விரோதமான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

கொஞ்சம் இதையும் படிங்க :  http://thenewscollect.com/the-issue-of-registration-of-barren-land-without-any-documents-to-individuals-case-in-madras-high-court/

டாஸ்மாக் தரப்பை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, மனுவுக்கு நவம்பர் 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Share This Article

Leave a Reply