நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகக் கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பினர்.
சீமான் வீட்டு கதவில் ஒட்டப்பட்ட இந்த சம்மனை கிழித்ததாக, அவரது பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாகர், அமல்ராஜ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இதையடுத்து, இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில் அரசியல் உள்நோக்கில் தாங்கள் கைது செய்யபட்டுள்ளதாகவும், காவல்துறை கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறனானது. நான் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிய அனுமதி இருப்பதால், ஆயுத தடுப்பு சட்ட பிரிவில் கைது செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள் செல்வம், சம்மனை கிழித்தது தொடர்பாக காவல் ஆய்வாளரை அவர்கள் தாக்கியதாக கூறினார். பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கி ஒருவேளை வெடித்திருந்தால் துரதிஷ்டவசமான சம்பவம் ஏற்ப்ட்டிருக்கும் எனக் கூறினார். சொந்த பாதுகாப்புக்காக துப்பாக்கியே தவிர அடுத்தவர்களை மிரட்ட துப்பாக்கி வைத்திருக்க அனுமதியில்லை எனவும் அவர் கூறினார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீனில் வெளியில் வரக்கூடிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இருவர் மீது வேறு எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து, துப்பாக்கி உரிமையை மீறியிருந்தால் அதனை ரத்து செய்வது தொடர்பாக அரசு முடிவெடுக்கலாம் என எனக்கூறிய நீதிபதி இருவரையும் இதற்கு மேல் சிறையில் வைக்க தேவையில்லை எனக்கூறி இருவருக்கும் ஜாமீன் வழங்கினார்.
மேலும், மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10.30 மணிக்கு பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.