- அரசு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் டி.சர்ட் அணிய தடை கோரி வழக்கு
துணை முதல்வர் உதயநிதி, அதிகாரப்பூர்வ பணிகளில் ஈடுபடும் போது டி.சர்ட் அணியாமல் முறையான ஆடை கட்டுபாடுகளை கடைபிடிக்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழக அரசியலில், 2021ல் நுழைந்தவர் உதயநிதி. இவர், 2022ல் விளையாட்டு துறை அமைச்சரானார். கடந்த செப்.,28ல், துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
பின், அவர் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், சாதாரணமாக டி-சர்ட் அணிந்து பங்கேற்று வருகிறார். இது, தமிழ்நாடு செயலக அலுவலக கையேட்டில் குறிப்பிட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு எதிரானது.’சாதாரண உடை’ என்று வகைப்படுத்தப்பட்ட டி-ஷர்ட்களையே, பெரும்பாலும் அணிந்து வருகிறார். அதில், தி.மு.க.,வின் சின்னமான உதயசூரியன் பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, கடந்த 2019ல் அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், அனைத்து அரசு ஊழியர்களும் எப்படி, எந்த மாதிரியான உடை அணிய வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/a-student-from-thanjavur-has-set-a-record-by-winning-a-gold-medal-in-the-544th-silambam-competition-held-in-chennai/
அரசாணையின்படி, தமிழ் கலாசாரம் அல்லது இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து ஆண் ஊழியர்களும் வேட்டி சட்டை அல்லது பேன்ட் சட்டை தான் அணிய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மீறும் வகையில், துணை முதல்வர் உதயநிதி உடை அணிந்து, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அரசு ஊழியரான ஒருவர், அரசு நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சின்னத்தை காட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உதயநிதியின் செயல்கள் அரசியலமைப்புக்கு எதிரானது; சட்டவிரோதமானது.
அதுமட்டுமின்றி, அரசாணைக்கு எதிரானது.
எனவே, அரசாணையின்படி தன் அதிகாரப்பூர்வ பணிகளில் ஈடுபடும்போது, முறையான ஆடைக் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு உதயநிதிக்கு உத்தரவிட வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.