- குறுக்கு விசாரணைக்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
- கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய, திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புப்படுத்தி பேசியிருந்தார்.
- தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கூறி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு.

ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்த மான நஷ்டஈடு வழக்கின் குறுக்கு விசாரணைக்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய, திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்புப்படுத்தி பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் தன் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி, சமுதாயத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கூறி அவருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இது தொடர்பான வழக்கில் குறுக்கு விசாரணை நடத்த ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் 3 நாட்கள் அனுமதி வழங்கியதாகவும், ஆனால் அந்த நாட்களில் விசாரணை நடத்த இயலவில்லை என தெரிவித்தார்.
மீண்டும் மாஸ்டர் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, செப்டம்பர் 10ம் தேதி குறுக்கு விசாரணைக்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.