அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு.
செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு . பொன்முடி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து வழக்கு ஒத்தி வைப்பு .
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி 1 கோடியே 36 லட்சம் ரூபாய வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் வேலூர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை .

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, வழ்க்கின் விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.