தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி வயது (77), சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு உயிரிழந்தார்.
தற்கொலைக்கு முயன்ற ஈரோடு மக்களவை தொகுதியின் ம.தி.மு.க எம்.பி கணேசமூர்த்தியின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதிமுக தொடங்கியது முதலே அதன் மூத்த தலைவராக, கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவுக்கு பக்கபலமாக தொடர்ந்து இருந்து வந்தவர் கணேசமூர்த்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு வழங்கப்பட்ட ஒரே தொகுதியிலும் அவரையே அக்கட்சி நிறுத்தியது.
தற்போதைய ஈரோடு தொகுதி எம்.பி.யான கணேசமூர்த்திக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், மார்ச் 24-ம் தேதி காலையில் கணேசமூர்த்தி விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவரது உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கே அவருக்கு சிகிச்சைக்கு பிறகு, உயர் சிகிச்சைக்காக கணேசமூர்த்தி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2019 தேர்தலில் மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதியில் எம்.பியாக உள்ளார். இந்த முறை ஈரோடு தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. இதனால் கணேசமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், அதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) ஈரோட்டில் உள்ள அவரது வீட்டில் தென்னை மரங்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்தை உபயோகித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட கணேசமூர்த்தி, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் (கேஎம்சிஎச்) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலை 5.05 மணிக்கு உயிரிழந்தார் என மதிமுக தலைமை அறிவித்தது.
தற்போது, இன்று காலை சிகிச்சையின் பொழுது கணேசன்மூர்த்திக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உயிரிழந்த கணேசமூர்த்தி உடல் ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே கட்சி நிர்வாகிகள் கூறியதாவது, மதிமுக தொடங்கியது முதல் கணேசமூர்த்தி கட்சியில் உள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் கட்சியில் பொருளாளராக உள்ளதாகவும், தற்போது கணேசமூர்த்தியின் உயிரிழப்பு மதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கொங்குச் சீமையின் கொள்கை வேங்கை கணேசமூர்த்தி மறைவு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

அப்போது இளமைக் காலம் தொட்டு தியாக வேங்கையாக என்னோடு பயணம் செய்த ஆருயிர் சகோதரர் கணேசமூர்த்தியின் மறைவுச் செய்தி கேட்டு ஆராத் துயரமும், அளவிட முடியா வேதனையும் அடைந்தேன் என இரங்கல் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.