திண்டுக்கல் மாவட்டம் அருகே, ஒடுக்கம்பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா வயது (50). இடியாப்பம் வியாபாரம் செய்து வரும் இவர் தனது மனைவி ஜெயா வயது (40), மகள்கள் வசந்தி வயது (17), வைதேகி வயது (13) ஆகியோருடன் ஒரு காரில் சென்னைக்கு சென்றுள்ளனர். இந்த காரை அழகுராஜா ஓட்டிச் சென்று உள்ளார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை கார் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் சிப்காட் எதிரில் சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மெதுவாக சென்றதால் அதன் மீது மோதாமல் இருக்க காரை அழகுராஜா மெதுவாக ஓட்டிச் சென்று உள்ளார்.

மேலும், பின்னால் வந்த ராமேஸ்வரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற தனியார் டிராவல்ஸ் பேருந்து கண் இமைக்கும் நேரத்தில் கார் மீது மோதியது. கார், பேருந்து மற்றும் லாரிக்கு இடையே நசுங்கி விபத்துக்கு உள்ளாகியது. இந்த விபத்தில் காரில் சென்ற அழகுராஜாவின் மனைவி ஜெயா மற்றும் மகள் வசந்தி ஆகிய இருவரும் மீட்பதற்குள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் அந்த பேருந்தில் ஆன்மீக சுற்றுலா சென்ற காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி வயது (54), தன்ராஜ் வயது (52), வரதராஜ் வயது (70), மோகன் வயது (72), சுரேஷ் வயது (40), குப்பு வயது (63), நிர்மலா வயது (61), ஸ்ரீதரன் வயது (63), பரணி வயது (50), சந்திரசேகர் வயது (63), பழனி வயது (54), கிருஷ்ணவேணி வயது (65), நீலா வயது (56), புவனேஸ்வரி வயது (49), ராதா வயது (55), பொன்னி வயது (58), மல்லிகா வயது (34), லதா வயது (47), காரை ஓட்டிச் சென்ற அழகுராஜா ஆகிய 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த எடைக்கல் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகிலுள்ள உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க பட்டனர். அவர்களை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறன. விபத்தில் உயிரிழந்த ஜெயா மற்றும் வசந்தி ஆகிய இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தினால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.