இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க- கமல்ஹாசன் வாழ்த்து

1 Min Read
கமல்ஹாசன்

நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் இண்டியா கூட்டணி சார்பில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.

- Advertisement -
Ad imageAd image

இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காகச் சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் மு.க. ஸ்டாலின் வெற்றியைக் குவித்திருக்கிறார்.

கமல்ஹாசன்

அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியாவிற்கு வழியும், ஒளியும் காட்டக் கூடியவை. இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply