தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாந்தி நகரில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைமையகத்தில்
முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் தினமும் ஐந்து வேளை தொழுகை மற்றும் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை தொழுகை நடைபெறுவதற்காக வருகை தந்த தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் வழிபாட்டுத்தளத்தில் முன்பக்க இரும்பு கதவு பூட்டு உடைப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வழிபாட்டு தளத்தில் உள்ள முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் ஆகிய 10கும் மேற்பட்ட பூட்டுகளை உடைத்து இரும்பு ஆயுதங்களை அதன் அருகிலேயே மர்ம நபர்கள் தூக்கி வீசி சென்றுள்ளனர்.

மேலும் மாவட்ட தலைமையகத்தில் உள்ள பீரோக்களை உடைத்து சென்றுள்ளனர்.தகவலயறிந்த மாவட்ட நிர்வாகிகள் ஜாபர் அலி,முகமது பாரூக் மற்றும் ஏராளமான தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் திரண்டனர். இது குறித்து மாவட்ட தலைவர் ஜாபர் அலி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.