விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கல்வி கடன் வழங்கும் முகாமில் கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 1.19 கோடி மதிப்பீட்டு தொகை, கல்வி கடனை அமைச்சர் பொன்முடி வழங்கி தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், தெய்வானை அம்மாள் கல்லூரியில் அரசு சார்பில் மாவட்ட அளவில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பழனி தலைமை வகித்தார். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவகுமார் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் வரவேற்றார்.

இந்த கல்வி கடன் முகாமில் 50 கல்லூரிகளைச் சேர்ந்த 750 மாணவ, மாணவியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் முதல் கட்டமாக மருத்துவம் பொறியியல் கல்லூரியில் பயிலும் 5 மாணவர்களுக்கு 1.19 கோடி மதிப்பிலான கல்வி கடன் ஊக்க தொகையை, உதவிக்கான ஆணையை அந்த நிகழ்வில் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஸ்வரன், உதவி இயக்குனர் திறன் மேம்பாடு சிவ நடராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் வங்கி அதிகாரிகள், பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கல்வி கடன் குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.