மதுபான கடை
தமிழ்நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை டாஸ்மாக் நிர்வாகம உயர்த்தியுள்ளது. அதன்படி குவாட்டருக்கு ரூ.10 முதல் பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதே நேரம் இந்த மது வகைகள் எலைட் மதுபானக் கடைகளில் மட்டுமே கிடைப்பவை எனவும் உள்நாட்டு மதுபானங்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு
மதுபானங்கள் விலை உயர்த்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.