விழுப்புரம் மாவடடம், திருவெண்ணெய்நல்லூர் அருகே முன் விரோத தகராறில் கூலி தொழிலாளியை கொலை செய்த மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏமப்பூரை கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், இதனை தொடர்ந்து காந்திபுரம் காலனியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே சாலையில் ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மற்றோரு வாகனத்தை முந்தி செல்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே பகை மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2014 ஜனவரி 16 ஆம் தேதி காந்திக்குப்பம் காலனியை சேர்ந்த ஏழுமலை என்பவரை ஏமப்பூரைச் சேர்ந்த அரசு என்கிற ஜோதி வயது (38), விஜி என்கிற விஜயகுமார் வயது (33), மூர்த்தி என்கிற விநாயகமூர்த்தி வயது (32) ஆகியோர் மூன்று பேரும் சேர்ந்து அந்த கூலி தொழிலாளியை கல் மற்றும் கட்டையால் தாக்கி சம்பவ இடத்திலேயே கொலை செய்தனர். இதுகுறித்து அவரது உறவினர் ஐயப்பன் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய போலீசார் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து அரசு உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். இந்த வழக்கு பதிவு விசாரணை விழுப்புரம் எஸ்.சி, எஸ்.டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதற்கிடையே சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பாக்கிய ஜோதி நேற்று தீர்ப்பளித்து உத்தரவிட்டார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.