இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக பெய்து வரும் மழையின் காரணமாக வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளித்து வருகிறது.
கோடை வெயிலின் வறட்சியின் காரணமாக இடம்பெயர்ந்த வனவிலங்குகள் தற்போது மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வர துவங்கியுள்ளது.

குறிப்பாக யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் மீண்டும் சாலை ஓரங்களில் உலா வர துவங்கியுள்ளது. இந்த நிலையில் உதகையை அடுத்த மஞ்சூர் நேரு நகர் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில்,

அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் வலியுறுத்துள்ளனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.