முதுமலையில் மானை வேட்டையாடி சிறுத்தை தூக்கிச்சென்றது. அதை சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியுடன் பார்த்து வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், அடுத்த கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு வனபகுதியில் வனவிலங்குகளான புலி, காட்டு யானை, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மான் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால், மான்கள், காட்டெருமைகள் புலி, காட்டு யானை, சிறுத்தை, போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் சாலையோரத்தில் நடமாடி வருகிறது.
இதனால் புலி, காட்டு யானை, சிறுத்தை, போன்ற வனவிலங்குகள் சாலை யோரத்தில் வருவதை அடிக்கடி காண முடிகிறது. நேற்று மாலை சாலையோரத்தி சென்ற மானை வேட்டையாடி சிறுத்தை இழுத்து சென்றது.

அதை பார்த்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து சமுக வளைதளங்களில் வெளியிட்டு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.