நீலகிரி மாவட்டம், அடுத்த உதகை அருகே உள்ள எல்லநள்ளி கெட்கட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு இரவில் வரும் சிறுத்தையும், கரடியும் சிசிடிவியில் பதிவு வெளியானதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அப்போது வனத்துறையினருக்கு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வனபகுதியை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலைகள் காணப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் 65% சதவீதம் வனபகுதியும் தேயிலை தோட்டங்களும் உள்ள பகுதியாகும். இந்த வனபகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் காணபடுகின்றன.
இந்த நிலையில் தற்போது வனபகுதிகளில் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கமாகும். இந்த நிலையில் உதகை அருகேயுள்ள எல்நள்ளி கிராம பகுதிக்கு சிறுத்தை மற்றும் கரடி தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது.

அப்போது சிறுத்தையானது கிராமத்தில் உள்ள வாளர்ப்பு நாய் மற்றும் ஆடுகளை வேட்டையாடி வருகிறது. இதனால் அந்த பகுதி கிராம மக்கள் அச்சத்தில் உள்னர். அதனால் சிறுத்தை மற்றும் கரடி குடியிருப்பு பகுதிக்கு வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனால் கிராம மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிராமவாசிகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கும் காட்சிகள் அச்சத்தைத் தூண்டியுள்ளன. அதிகாரிகள் நிலைமையை மேலும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனால் ஊருக்குள் உலா வரும் சிறுத்தை மற்றும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் வனவிலங்கு மனித தொடர்பு குறித்து கவலையை எழுப்பியுள்ளது. இதனால் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.