நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி 2026 நடைபெற இருக்கின்ற சட்டமன்ற கூட்டணிக்கான முன்னோட்டம் இந்த கூட்டணி ராசியான கூட்டணி. விழுப்புரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேச்சு.

விழுப்புரத்தில் தேமுதிக அதிமுக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர் பாக்யராஜ் ஆரணி நாடாளுமன்ற வேட்பாளர் கஜேந்திரன் ஆகியோரையே ஆதரித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் கட்சியை கட்டுப்பாடோடு கொண்டு சேர்ந்தவர்கள். அதிமுக, தேமுதிக ஜாதி மதங்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட கட்சிகள். 2011 இல் பலர் குழப்பங்கள் ஏற்படுத்தினார்கள் அதற்கு இடையே கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணி தொண்டர்கள் விரும்பும் கூட்டணி விஜயகாந்த் இல்லாமல் நான் பிரச்சாரத்திற்கு வரும் கூட்டங்கள் தான் இவை இன்று விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரிஷிவந்தியம் தொகுதிக்கு சென்றிருந்தேன் எனக்கு அழுகை வந்து விட்டது.அந்த தொகுதிக்கு விஜயகாந்த் எவ்வளவோ செய்திருக்கிறார்.குறிப்பாக மனலூர்பேட்டை மேம்பாலம்.இன்றும் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வரும் மக்கள் அதிகம் பேர் விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மக்கள் தான்.

பாஜகவிற்கு தொண்டர்கள் பாடம் புகட்டுவார்கள் விஜயகாந்த் எப்போதும் சொல்லுவார் விவசாயமும் நெசவுத் தொழிலும் நமது இரண்டு கண்கள் போல என்று எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஜெயலலிதா அம்மா உணவகத்தை கொண்டு வந்தார். விஜயகாந்த் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கி பெருமைப்படுத்தியவர் அதனால் தான் அவர்கள் நினைவிடத்தில் இன்றும் அன்னதானம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.ஒருநாளைக்கு மொரிசியஸ் நாட்டிற்கு அடுத்தபடியாக கரும்பு விவசாயம் செய்யும் மாவட்டம் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களாகும். திமுக ஆட்சியில் அதிகார பலம் பணபலம் ரவுடிசம் வன்முறையை நம்பி இருக்கிறார்கள். கஞ்சா போதை, பாலியல் தொந்தரவு. வேலை வாய்ப்பு குறைபாடு ஆகியவற்றிற்கு சவுக்கடி கொடுக்க வாக்களியுங்கள். ஆட்சிக்கு முன் ஒரு நிலைப்பாடு ஆட்சிக்குப் பின் ஒரு நிலைப்பாடு இதுதான் திராவிடமாடல் ஆட்சி. இந்த கூட்டணி 2026 மக்கள் கூட்டணியாக அமையும் எனவே இரண்டு வேட்பாளர்களுக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.