பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் – முத்தரசன்

1 Min Read
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன்

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு தொடர் வண்டியில் உரிய ஆவணங்களின்றி நான்கு கோடிக்கும் கூடுதலான தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.இது தொடர்பான விசாரணையில் புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட3 பேர் இதுவரை இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முத்தரசன்

இந்தப் பணம் பாஜக வேட்பாளரும், தற்போது சட்டமன்ற உறுப்பினராகத் உள்ள பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களது தேவைக்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வருகிறது. கைதானவர்கள் விசாரணையில் கொடுத்துள்ள வாக்குமூலம் இதனை உறுதிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி கடுமையான குற்றமாகும். தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கும் எதிரானதாகும். சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறைகளை சீர்குலைத்து, வாக்காளர் உணர்வுகளை தங்களது தீய செல்வாக்குக்கு அடிபணிய நிர்பந்திக்கும் குற்றச் செயலாகும்.

இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இந்த நடத்தை விதி மீறல் மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி உறுதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply