லால் சலாம் திரை விமர்சனம்.

2 Min Read

சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களில் கதைகளை கொண்டு இயக்கிய படங்கள் மிக குறைவு தான். அதிலும் மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் பேசும் படம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ”லால் சலாம்” திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது எனலாம்.

- Advertisement -
Ad imageAd image

திரைப்படத்தில் வரும் காட்சிகள் ஒரு உண்மை சம்பவத்தை தொகுத்து எடுக்கப்பட்டதன் விளைவை பார்க்க முடிகிறது. அந்த வகையில் திரைப்படம் சொல்லுகிற நிகழ்வுகள் தற்போதைய மத வெறிகளை முறியடிக்கும் விதமாக அமைந்திருப்பது வரவேற்கத் தகுந்தது. 90 களில் நடைபெற்ற கதையாக திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் தற்போதைய காலத்திற்கு ஒத்துப் போகும் கதையாக திரைப்படம் அமைந்திருக்கிறது. திரைப்படத்தில் கூடுதல் பலமாக மொய்தீன் பாயாக வரும் ரஜினி தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் விதம் இதுவரை ரஜினியின் படத்தில் இல்லாத ஒன்றாகவே இருந்தது.

படத்தினை இயக்கி இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு நல்ல கதை களத்தை படமாக இயக்கியிருக்கிறார் என்று சொல்லலாம். மக்களின் வாக்குகளை பெற அரசியல்வாதிகள் நடந்து கொள்ளும் விதத்தை அப்பட்டமாக படமாக்கி இருக்கிறது லால் சலாம்.
”18 வயசு ஆயிட்டா அவன் பைத்தியக்காரனா இருந்தாலும் கையெடுத்து கும்பிடணும்” என்கிற வசனம் எதார்த்த அரசியலை விளக்கி இருக்கிறது. படத்தில் வரும் மாரியம்மன் வேடம் ஒரு நல்ல உயிரோட்டத்தை படத்தில் வழங்கி இருக்கிறது. படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் தனது எதார்த்த நடிப்பை அப்படியே வழங்கி இருக்கிறார்.

இந்து முஸ்லிம் மோதல் கதை பின்னணியில் இருந்தாலும் இறுதியில் மத நல்லிணக்கத்திற்கு எதிராக அரசியல்வாதிகள் செயல்பட்டாலும் இறுதியில் சகோதரத்துவமாய் இயங்குவது என்று கதையை முடித்து இருப்பது ஒரு மிகுந்த பாராட்டை பெற்றது.

கதை 90களில் அமைந்திருந்தாலும் கடலூர் மத்திய சிறை ஆங்கிலேயர் காலத்து சிறை என்பதால் இன்னமும் அந்த சிறை வடிவமைப்பு அப்படியே தான் இருக்கிறது அதேபோன்ற ஒரு காட்சி அமைப்பை பயன்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். திரைப்படம் தொடங்கி சிறிது நேரத்தில் வந்திருக்கும் ஒரு காதல் பாடல் தவிர்த்து இருந்தால் நன்றாக இருக்குமோ என என்ன தோன்றுகிறது. மேலும் கதாநாயகி பற்றிய ஒரு தொடர்ச்சி இல்லாமல் போனது கதை.

ஏ ஆர் ரகுமானின் இசை படத்திற்கு ஒரு கூடுதல் பலம்.தேவையான இடத்தில் தேவையான வசனங்கள் கையாளப்பட்டிருக்கிறது.
கிரிக்கெட் காட்சிகளில் அப்போது பங்குபெறும் கபில்தேவை பயன்படுத்தியிருப்பது மிக சிறப்பு. திரைப்படம் 90 களுக்கு மீண்டும் கொண்டு சென்றிருக்கிறது. நல்ல திரைப்படங்கள் பெரும்பாலும் வசூலை எட்டுவதில்லை என்பதற்கு லால் சலாம் ஒரு உதாரணம். ஆனாலும் சிறந்த கதையம்சம். திரைப்பட குழுவினர்கள் மீண்டும் ஒரு வெற்றி திரைப்படத்தை இயக்க வழி வகுத்துள்ளது லால் சலாம் படம் வெற்றி பெற்றது.

Share This Article

Leave a Reply