சென்னையில் பால் பாக்கெட் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு..!

2 Min Read

புயல் காரணமாக சென்னையில் பால் பாக்கெட்டுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் கேன்கள் கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. இதனால் கனமழை ஓய்ந்தும் மக்களின் சோகம் தொடருகிறது. மிக்ஜம் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரும்சேதம் அடைந்துள்ளன. சில இடங்களில் வெள்ள நீர் வடிந்து விட்டன. சென்னையில் மழை ஓய்ந்தும் வெள்ளநீர் வடியாத நிலையில் பல பகுதிகளில் மக்கள் சிரமத்தை எதிர் கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருளான பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையில் மயிலாப்பூர், அண்ணாநகர், எழும்பூர், குரோம்பேட்டை, ஓட்டேரி, பெரியமேடு, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், சாலிகிராமம், தேனாம்பேட்டை உள்ளிட்ட நகரில் பல பகுதிகளில் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

- Advertisement -
Ad imageAd image
குடிநீர் தட்டுப்பாடு

பொதுமக்கள் பயன்படுத்துகிற ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு தான் இந்த நிலை என்றாலும், தனியார் பால் பாக்கெட்டுகளுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் காலையில் கண் விழிக்கும் மக்கள் எங்கே பால் பாக்கெட் கிடைக்கிறது என்ற எதிர்பார்ப்போடு தான் நாளை தொடங்க வேண்டியுள்ளது. இப்போது என்று சில பெட்டிக்கடைகளில் ஏன் சூப்பர் மார்க்கெட்களில் கூட பாலின் விலை ரூபாய் 2 முதல் ரூபாய் 10 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது எந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். என்னதான் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும் தட்டுப்பாடு இருப்பதாகவே பொதுமக்கள் குமரிவருகிறார்கள். எனவே அரசு உரிய நடவடிக்கைகளை கையாண்டு இந்த செயற்கை தட்டுப்பாட்டை தடுத்து நிறுத்தவும், பால் பாக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் போக்கை தடுத்து நிறுத்தவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோருக்கு கடும் தண்டனை வழங்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கொந்தளிப்புடன் தெரிவிக்கிறார்கள்.

பொதுமக்கள் அவதி நிலை பெரும் சோகம்

அதுபோல 20 லிட்டர் தண்ணீர் கேன்களுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. சில இடங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். சென்னையில் வேளச்சேரி, தாம்பரம், வரதராஜபுரம், முடிச்சூர், கீழ்க்கட்டளை, பள்ளிக்கரணை, மவுலிவாக்கம், மடிப்பாக்கம், வடபெரும்பாக்கம், உள்ளிட்ட பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடிந்த பாடில்லை. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்பை விட்டு வேறு வழியின்றி நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். அந்த முகாம்களில் முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சில முகாம்களில் சாப்பாடு சரியில்லை என்றும், உடைகள் கிடைப்பதில்லை என்றும், புகார்கள் எழுந்திருக்கிறது. எது, எப்படியோ மழை ஓய்ந்தும் பொதுமக்களின் மனதில் வந்த சோகம் தீர்ந்தபாடில்லை.

Share This Article

Leave a Reply