12 மணி நேர வேலைச் சட்டம் வாபஸ்: தமிழக அரசுக்கு கி.வீரமணி பாராட்டு

1 Min Read
கி.வீரமணி

மே நாள் பரிசாக, 12 மணி நேர வேலைச் சட்டத்தை முற்றிலும் திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசைப் பாராட்டுகிறோம். என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது,”தொழிலாளர் பணி நேரத்தை – சில தொழிற்சாலைகளில், தொழிலாளர்கள் விரும்பினால் 12 மணி நேரமாக அதிகரித்துக் கொள்ளலாம் என்று சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் நிறைவேற்றப்பட்ட சட்டவரைவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்று, நமது முதல் அமைச்சர் அதை நிறுத்தி வைப்பதாக 24 மார்ச் அறிவித்தார்.

அதனை நிறுத்தி வைத்தால் மட்டும் போதாது. அதையே திரும்பப் பெறும்படி ரத்து செய்ய வேண்டும் என்று நாம் உள்பட பலரும் வற்புறுத்திக் கொண்டு வந்தோம்.

கி.வீரமணி

அதனை இன்று நமது முதலமைச்சர் ஏற்று மே தினக் கொண்டாட்டத்திற்கு அனைத்துத் தொழிலாளருக்கும் முழு மகிழ்ச்சி இருக்கும் வகையில், சட்ட வரைவைத் திரும்பப் பெற்றதாக அறிவித்திருப்பதற்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டு – வாழ்த்து – நன்றியைத் தொலைபேசியில் உடனடியாகத் தெரிவித்தோம்.
முதல்வரும் நன்றி தெரிவித்தார். வருகிற 7ஆம் தேதி தாம்பரத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் தொழிலாளர் அணி மாநாட்டில் முதல்வருக்குப் பாராட்டு விழாவும் இணைத்து நடத்திடுவோம் என்று அவர்களிடமே நான் மகிழ்ச்சியோடு அறிவித்தோம்.

உண்மையான மக்களாட்சி தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியாகவே நடைபெறுகிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டும் இது!

இது தொழிலாளர்களுக்கு இவ்வாண்டு நம் முதலமைச்சர் அளித்த ஆக்கப்பூர்வப் பரிசு” எனக் கூறியுள்ளார்.

Share This Article

Leave a Reply