கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை.

1 Min Read
  • கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை நவீன சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரா, பீகார், ஒரிசா, உத்ரபிரதேஷ், மத்திய பிரதேஷ், ஜார்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் முலமாக காய்கறிகள், பழங்கள், ஆட்டோ மொபைல்ஸ் உதிரிபாகங்கள், மீன், இறால் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்கள் ஏற்றி வரப்படுகிறது.

இவ்வாறு ஏற்றி வரும் வாகனங்கள் இந்த சோதனைச் சாவடியில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வட மாநிலங்களுக்கும் தமிழகத்திற்கும் சென்று வருகின்றன.

- Advertisement -
Ad imageAd image

இவ்வாறு சோதனைச் சாவடி ஊழியர்கள் சோதனை மேற்கொள்ளும் போது பல்வேறு காரணங்களை காட்டி டிரைவரிடம் லஞ்சமாக 500 முதல் 1000 வரை பணத்தை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் வாடிக்கையாக நிலக்கரி, சிலிக்கான் மண், இரும்பு மூலப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்று வரும் வாகனங்களிடம் மாதாந்திர அடிப்படையில் லஞ்சம் பெறுவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சோதனை சாவடி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென இன்று மாலை 6 மணி அளவில் சோதனைச் சாவடியை சுற்றி வளைத்த ஏ.டிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கணினியில் வரவு செலவு மற்றும் கையிருப்பு தொகை உள்ளிட்டவற்றை தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கொஞ்சம் இதையும் படிங்க: http://thenewscollect.com/floor-stalls-set-up-for-diwali-removed-overnight-traders-are-shocked/

2 மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் கணக்கில் வராத பணம் 90 ஆயிரம் ரூபாய் சிக்கியது. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பார்த்திபன், விஜய பாரதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்து நடவடிக்கை.

Share This Article

Leave a Reply