கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி.
இவரது மனைவி மகன் சுபாஷ் மருமகள் அனுசுயா திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தண்டபாணியின் மகன் சுபாஷ் அனுஷா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்.
இதுபற்றி அறிந்த தண்டபாணி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் காதலை கைவிடும்படி சுபாஷிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 15 நாட்கள் கழித்து தன்னுடைய பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறார் மனைவியுடன் சுபாஷ் அப்போது அங்கு வந்து அவருடைய தந்தை மூன்று பேரையும் அறிவாளால் வெட்டியுள்ளார். இதில் தாய் மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். அனுஷா ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தண்டபாணியை காவல் துணை கண்காணிப்பாளர் அமலா அட்வின் காவல் ஆய்வாளர் பார்த்திபன் குற்றத் தடுப்பு காவல் உதவியுடன் கைது செய்தனர்.

போலீசார் கைது செய்ததும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் தண்டபாணி.
தற்கொலை செய்து கொள்ள கழுத்தை அறுத்துக்கொள்ள முயற்சி செய்யும் பொழுது காவல்துறையினர் தடுத்து, தண்டபாணியை பத்திரமாக மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.