கோவையில் கணவரின் கள்ளக்காதலை கண்டித்த மனைவியை கணவர் சரமாரியாக தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், பீளமேடு அருகே காந்தி மாநகர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் 27 வயது பெண். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பாப்பம்பட்டி பிரிவு அருகே பள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஐடி ஊழியரான ஒருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

அப்போது இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்ததால் வசதிக்கு குறைச்சல் இல்லை. இவர்களது வாழ்க்கையும் இனிதாக இருந்தது. இவர்களின் அன்னியோனியத்தை பார்த்து ஊரும், உறவினர்களும் மெச்சினர்.
இந்த நிலையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் இவர்களது வாழ்வில் வீசத் தொடங்கியது. சம்பவத்தன்று தனது கணவர் ஒரு இடத்தில் தனது காரில் வேறு ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். அது குறித்து மனைவிக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனம் வருந்தினார்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு அவரது மனைவி சென்றார். அங்கு தனது கணவரும் வேறு ஒரு பெண்ணும் காரில் இருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த இடத்திலேயே உரக்க கத்த தொடங்கிவிட்டார்.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த கணவன், மனைவியின் வரம்பு மீறிய வார்த்தைகளை கண்டு அவரும் எகிற ஆரம்பித்தார். “ஒழுங்கா இங்கே இருந்து போய் விடு, எதுவாக இருந்தாலும் வீட்டில் போய் பேசிக் கொள்ளலாம்” என கூறியுள்ளார். ஆனால் மனைவியின் ஆவேசம் அடங்கவில்லை.

இதனால் வாக்குவாதம் வளர்ந்தது, அக்கம் பக்கத்தினர் வந்து வேடிக்கை பார்த்தனர். இந்த நிலையில் தான் அவமானத்தில் கோபமடைந்த கணவன், தனது மனைவியை கடுமையாக தாக்கத் தொடங்கினார். எல்லை மீறி எட்டியும் உதைத்து, கையால் அடித்து, வயிற்றில் குத்தி கீழே தள்ளி விட்டு மிரட்டியுள்ளார்.
இதை அடுத்து பீளமேடு போலீஸ் நிலையம் சென்ற பெண் கணவன் மீது புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.