கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி சுமார் 60 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை கைது செய்திடவும்,
கள்ளசாராயம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுத்திடவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை சிவானந்தா காலனி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமை வகித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ் கனகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் யூ.கே.சிவஞானம், மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு,

கள்ளசாராய உயிரிழப்புகளை கண்டித்தும், கள்ளசாராயம் உள்ளிட்ட போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்திட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.