கோவை, மாவட்டம், அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கொசு வலை வியாபாரி. இவர் தனது மனைவி ரஞ்சிதா (30). மகன் அபிஷேக் (8) மற்றும் மகள் நித்திஷா (7) ஆகியோருடன் நேற்றிரவு காரில் கரூர் சென்று விட்டு மீண்டும் சிறுமுகை நோக்கி சென்று சென்று கொண்டிருந்தார்.

பவானிசாகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்களின் கார், நெசவாளர் காலனி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முருகன் வந்த ஆல்டோ காரின் முகப்பு முற்றிலும் சேதமடைந்தது.

அதில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முருகன், மனைவி ரஞ்சிதா, மகன் அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது காயமடைந்த நித்திஷா சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்தை நேரில் பார்த்த கிராமமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆலம்புனஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாலை விபத்தில் எதிரே வந்த காரில் வந்த கல்லூரி மாணவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இது தொடர்பாக பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.