கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள பாக்கு கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 2 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதை பொருட்கள் பறிமுதல். அசாம் மாநில தொழிலாளர்கள் ஆறு பேர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் முழுவதும் போதை பொருள் விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பெயரில் தனிப்படை போலீசார் அமைத்து தீவிர கணப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொழிலாளர்களை குறி வைத்து உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொண்டாமுத்தூர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து போலீசார் தொண்டாமுத்தூர் முட்டிபாளையம் பகுதியில் உள்ள பாக்கு கிடங்கில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு மெத்தப்பெட்டமைன் எனப்படும் உயர் ரக போதை பொருட்கள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 70 குப்பிகளில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பத்து கிராம் மெத்தபெட்டமைன் உயர் ரக போதை பொருட்கள் இருந்தது. மேலும் 1900 பிளாஸ்டிக் குப்பிகளும் கண்டறியப்பட்டது.
பின்னர் இந்த போதை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த நூர்ஜகான் இஸ்மாயில் மனைவி ஆஷ்மா கா துன் (40), இத்ரிஷ் அலி மனைவி ஜஷீரா கா துன் (29),

எசியாசின் அலி மகன் இத்ரிஷ் அலி (29), அலி உசைன் மனைவி குதிஜா கா துன் (37), மன்சூர் அலி மகன் அலிஉசைன் (48) மற்றும் குத்தூஸ் அலி மகன் ரபிபுல் இஸ்லாம் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பெங்களூரில் இருந்து உயர் ரக போதை பொருட்களை வாங்கி வந்து கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதை அடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 10 கிராம் எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதை பொருள் மற்றும் 1900 பிளாஸ்டிக் குப்பிகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.