மண்டகப்பாடி கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

1 Min Read
தேர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது மண்டகப்பாடி கிராமம். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இந்த கோவிலில் தேர் திருவிழாவானது நேற்று மாலை தொடங்கி,  இரவு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில் மண்டகபாடி மட்டும் அல்லாது அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கூத்தாண்டவருக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்த வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்த திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டனர்.

மேலும்,  கும்மி அடித்து கற்பூரம் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர் மாலை 4 மணிக்கு தொடங்கிய தேரானது ஊர் முழுவதும் இரண்டு முறை சுற்றி வந்து இரவு 10 மணியளவில் களபலி நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு கூத்தாண்டவர் வழிபட்டு சென்றனர்.

Share This Article

Leave a Reply