இயக்குநர் வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் திடீரென தீயாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
சென்னை 600028, கோவா, சரோஜா, மங்காத்தா, மாநாடு படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் சினிமா வட்டாரத்தையும் அவரது ரசிகர்களையும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.

மாநாடு படத்தை முடித்த வெங்கட் பிரபு , அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை படத்தை இயக்கினார். ஆனால், அடல்ட் கன்டென்ட் காமெடி படமான அந்த படம் மாநாடு படம் அளவுக்கு பெரிதாக போகவில்லை. அதன் பிறகு நடிகர் நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி நடிப்பில் கஸ்டடி எனும் படத்தை இயக்கி உள்ளார். விரைவில் அந்த படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்துக்கான ப்ரோமோஷன் ஸ்டன்ட்டாக இது இருக்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.