- பெண் தோழியுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக் கேட்ட மனைவியின் கழுத்தை பெல்டால் நெறித்து கொலை வழக்கில், கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருவிக நகர் கோபாலபுரத்தை முதல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(34), இவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக பணிபுரிந்து வந்தார்.இவர் கடந்த 2008 ம் ஆண்டு கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமண செய்து கொண்டார். இவர்களுக்கு 14 வயது மற்றும் 10 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில், கணவன் சரிவர வேலைக்கு செல்லாமலும், குடும்ப செலவுக்கு பணம் வழங்காததாலும் அவர்கள் இடையே அவ்வப்போது, பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த 2018 செப் 11 ம் தேதியன்று கணவன் மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையில், கோபமடைந்த கணவன் சுரேஷ், மனைவியின் கழுத்தை பெல்டால் நெறித்து கொலை செய்தார். இது தொடர்பான வழக்கில், வரதட்சனை கொடுமை, கொலை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் திருவிக நகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/her-husband-who-died-in-police-attack-a-case-filed-by-the-wife-to-order-a-re-mortem/
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, மனைவியை கொலை செய்த கணவன் சுரேஷ்க்கு ஆயுள் தண்டனையும், அபராதமாக 25 ஆயிரமும் விதித்து உத்தரவிட்டார். தாயை இழந்த இரண்டு குழந்தைகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.



Leave a Reply
You must be logged in to post a comment.