தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கீழ்மாந்தூர் பழைய தெருவை சேர்ந்தவர் பாரதி வயது 35 இவரது மனைவி திவ்யா வயது 27. அதே பகுதி J..RJ நகரைச் சேர்ந்த டேவிட் என்கிற சதீஷ்குமார் வயது 38 திவ்யாவின் காதலன்.

கடந்த சில தினங்களாக பாரதியை காணவில்லை என்று அவரது உறவினர் செல்வமணி என்பவர் பந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் திவ்யா அவரது காதலன் டேவிட் என்கிற சதீஷ்குமார் சேர்ந்து பாரதியின் தலையில் அடித்து கயிற்றால் நெறித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் சதீஷ்குமார் கொலை செய்யப்பட்ட பாரதியின் உடலை மினி லோடு வேன் மூலம் திருப்பனந்தாள் அருகே பட்டம் குறுக்கு ரோடு மேலே உள்ள பாலத்தின் அருகே புதைத்து விட்டார்.

திவ்யாவையும் கள்ளக்காதலன் சதீஷ்குமாரையும் பந்தநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் பந்தநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.