ஜப்பானில் இந்திய படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. ரஜினியின் முத்து, கார்த்தியின் கைது உள்ளிட்ட சில படங்கள் ஜப்பானில் வெளியாகி வரவேற்பை பெற்றன.
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் நடித்த ஆர் ஆர் படத்தையும் ஜப்பான் மொழியில் வெளியிட்டனர்.

இந்த நிலையில் கன்னட மொழியில் தயாராகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் பான் இந்தியா படமாக வெளியான கே.ஜி.எப் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் படங்களையும் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்துள்ளனர்.
இந்த படங்கள் ஜப்பானில் முக்கிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் அடுத்த மாதம் இரண்டாவது வாரம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கே.ஜி.எப் படத்தில் யாஷ் கதாநாயகனாகவும் ஸ்ரீநிதி செட்டி நாயகியாகவும் நடித்து இருந்தனர்.
கே.ஜி.எப் முதல் பாகம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்தை எடுத்து வெளியிட்டு அதுவும் வசூல் குவித்தது.

கன்னட சினிமா வரலாற்றில் அதிக வசூல் பார்த்த படம் என்ற பெயரை கே.ஜி.எப் படம் பெற்றது.
ஜப்பானிலும் கே.ஜி.எப் படங்களுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று பாடக்குழுவினர் எதிர்பார்க்கின்றார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.