மது போதையில் யானையின் வாலை பிடித்துத் திருகிய நபர் – கோவத்தில் பாகனைத் தூக்கி வீசிய யானை -பரபரப்பு காட்சிகள் வெளியீடு.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காரியம் கரும்புகோணம் தேவி கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சி இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.
0:00
இந்த தேரோட்ட நிகழ்ச்சியின் ஊர்வலத்தில் இரு யானைகளைப் பங்கேற்க வைத்துள்ளனர்.இதில் பங்கேற்ற காஞ்சிரங்கோடு சேகரன் என்ற யானையின் வாலை முழு குடிபோதையிலிருந்த நபர் ஒருவர் திருகியுள்ளார்.இதில் கோவம் அடைந்த யானை தனது முன்னால் சென்று கொண்டிருந்த பாகன் ஒருவரைத் தும்பிக்கையால் தூக்கி எறிந்துள்ளது.
0:00
பின்பு கூட்டத்தில் மிரண்டு ஓடியும் உள்ளது . பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதில் மொத்தமாக ஐந்து பேர் படுகாயங்கள் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யானையின் மற்றொரு பாகனின் துரித நடவடிக்கையால் ஒரு சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அந்த யானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.மேலும் அந்த யானைப் பாகனைத் தாக்கும் காட்சிகளும் அதுபோல யானை மிரண்டு ஓடும் காட்சிகளும் -பொதுமக்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.