ஒரே பாலினத் திருமணம் என்பது ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களின் சட்டப்பூர்வ ஒன்றியத்தைக் குறிக்கிறது, அவர்களுக்கு எதிர் பாலின ஜோடிகளுக்கு அதே சட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. இருப்பினும், ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதும் ஏற்றுக்கொள்வதும் வெவ்வேறு நாடுகள் மற்றும் கலாச்சாரங்களில் கணிசமாக வேறுபடுகிறது.
இந்தியாவில், ஒரே பாலின திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை, மேலும் ஓரினச்சேர்க்கை 2018 இல் மட்டுமே குற்றமற்றது. LGBTQ+ உரிமைகளுக்கு எதிரான நாட்டின் சமூக மற்றும் கலாச்சார எதிர்ப்பின் நீண்ட வரலாறு ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதில் முன்னேற்றம் இல்லாததற்கு பங்களித்தது.
ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கு, கேரளாவைச் சேர்ந்த சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஜோடிகள், தங்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில்.

இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. என்றாலும், இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க, அரசு தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த (Syro Malabar) சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபை, ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்த திருச்சபையின் பொது விவகார ஆணையம் வெளியுட்டுல அறிக்கையில்.
ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது இயற்கைக்கு முரணானது. மேலும், நாட்டில் தற்போதுள்ள குடும்ப அமைப்பு முறைக்கு அநீதியை விளைவிக்கும் செயலாகவும் இருக்கும்.நம் கலாசாரத்தில் திருமணம் என்பது, எதிர் எதிர் பாலினத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு இடையிலான உறவை குறிக்கிறது.
ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கினால், குழந்தைகள் மற்றும் விலங்குகள் மீதான உடல் ரீதியான ஈர்ப்பு போன்ற பாலியல் பிரச்னைகளையும் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுவதற்கும் துாண்டுகோலாக இருக்கும்.
இந்த விஷயத்தில் தங்கள் நிலையை விளக்கி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும். ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளனர் .
Leave a Reply
You must be logged in to post a comment.