ஒவ்வோரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தை மாத வரை கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு தமிழக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சென்று வருவது வழக்கம் அதேபோல் தமிழகத்தில் உள்ள பல் ஊர்களில் சபரிமலை ஐயப்பன் சுவாமிக்கு கோவில் கட்டி வழிப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாசர் சுவாமிகள் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு கலந்து கொண்டு மயூர வாகன சேவன விழாவின் 100-வது ஆண்டை முன்னிட்டு சண்முக கவசம் மற்றும் குமாரஸ்தவம் பாராயணத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து மறுபதிப்பு செய்யப்பட்ட “பாம்பன் சுவாமிகளின் சரித்திரம்” என்னும் நூலையும் அவர் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்;-

திமுக ஆட்சிக்காலத்தில் தான் சித்தர்களுக்கு விழா எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருநாவுக்கரசர், ஸ்ரீமத் நாதமுனிகள், ஆளவந்தோர் போன்றோருக்கு திமுக ஆட்சியில் விழா எடுக்கப்பட்டுள்ளது. அதன் செலவினங்களை தமிழக அரசே ஏற்றுள்ளது என்று தெரிவித்தார். தற்போது மயிலாப்பூரில் உள்ள திருவள்ளூவர் கோவிலை கட்டுவதற்கு 13 கோடி ரூபாய் செலவிலும், நாகப்பட்டினத்தில் உள்ள அவ்வையாருக்கு கோவில் கட்டுவதற்கு 17 கோடி ரூபாய் செலவில் கோவில் கட்டுவதற்கும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தில் இதுவரை 1274 கோவில்களில் குடமுழக்கும், 5,557 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தற்போது 100 ஆவது ஆண்டாக நடைபெறும் பாம்பன் சுவாமிகளின் குருவிழாவைனை பெருவிழாவாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. அப்போது சபரிமலை விவாகரத்தை பொறுத்தவரை, தமிழக பக்தர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் கேரள முதல்வருடனும், அமைச்சராகிய நானும், கேரள அமைச்சருடனும், தேவசம் அதிகாரிகளுடனும் பேசி உள்ளோம்.

பின்னர் வழக்கத்திற்கு மாறாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தரிசனம் செய்வது காலதாமதம் ஏற்படுவது இயற்கை. அதை இருந்தாலும், இந்த கூட்ட நெரிசலை கேரள அரசு திறமையாக அசம்பாவிதங்கள் ஏதுமின்றி சமாளித்து வருகிறது. தற்போது வருங்காலங்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் கேரள அரசும், தேவசம் போர்டும் திட்டங்கங்களை வகுத்து வருகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோரும் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகின்றனர். தமிழக அரசும், கேரளா அரசும் பக்தர்களை கையாளுவதில் சிறப்பாக செயல்பட்டு வருவது பக்தர்களுக்கு திருப்தியாக உள்ளது என பக்தர்கள் பெருமைப்படுகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.