
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்பாள்புரம் காசி விசாலாட்சி அம்மன் – காசி விஸ்வநாதர் ஆலயம் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான ஆலயமாகும்.
ஆலயத்தில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 23 ம் தேதி துவங்கியது.

தினமும் பல்லக்கிலும், பூத வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்த நிலையில்
முக்கிய விழாவான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது காசி விசாலாட்சி அம்மனுடன் காசிவிஸ்வநாதர் தேரில் வலம் வருகிறார்கள்.

ராட்சத கிரைன் மூலம் 20 அடி உயரத்திலான ரோஜா மாலை பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துவரப்பட்டதும் சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டது.
திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.
ஒரத்தநாடின் 4 வீதிகளிலும் தேர் வலம் வந்ததும் மாலை 3 மணி அளவில் தேர் நிலைக்கு திரும்பிவிடும்
நாதஸ்வரம், தாரை தப்பட்டை, செண்டை மேளம் முழங்கிட தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.