கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது
தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 5.21 கோடி வாக்காளர்களில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

20 ஆம் தேதி வரை கர்நாடகாவில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். இந்த தேர்தலில்
பொது தொகுதிகள்- 173;
எஸ்சி 36;
எஸ்டி 15
என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 58,282 வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறும்,
அங்கே ஹிஜாப் விவகாரம், பெங்களூரில் திட்டங்களுக்கு கமிஷன் பெற்ற விவகாரம், மத மோதல், ஜாதி ரீதியிலான மோதல் உள்ளிட்ட பல விஷயங்கள் தேர்தல் நேரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 189 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை பாஜக நேற்று முதல்நாள் வெளியிட்டது. 9 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. காங்கிரசில் இருந்து பாஜக வந்த பலருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து நேற்று 23 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டது . கர்நாடகாவில் கடந்த 19 வருடங்களில் 3 முறை தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதில் 2004 தொங்கு சட்டசபை, 2008 தொங்கு சட்டசபை, 2018 தொங்கு சட்டசபைகள் முக்கியமானது ஆகும். அதிலும் கடந்த தேர்தலுக்கு பின் அங்கே 3 முறை முதல்வர்கள் மாறியது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை தொங்கு சட்டசபைக்கு பதிலாக ஏதாவது ஒரு கட்சி முழு மெஜாரிட்டி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருத்து கணிப்புகள் பல காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. இந்த தேர்தலில் 3 பெரிய கட்சிகளும் பல சிறிய சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.