முத்தங்களால் உருவான கமல்- கோவையில் தங்க நகை வடிவமைப்பாளர் அசத்தல்.

2 Min Read
முத்த ஓவியம்

ஓவியங்கள் பெரும்பாலும் வண்ணக்கலவைகளை கொண்டு பிரஷ் கொண்டு வரைவார்கள்.இன்னமும் வித்தியாசமாக வரைய வேண்டும் என்றால் கால்களால்,கண்களால் என உடல் உறுப்புகளால் ஓவியம் வரைவதை பார்த்திருக்கிறோம்.இங்கு ஒரு வித்தியாசமான முறையில் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

லிப்ஸ்டிக் ஓவியம் கேள்விப்பட்டதுண்டா இருக்காது,அதுவும் முத்தத்தால் ஓவியம் வரைகிறவரை பார்த்ததுண்டா அதுவும் யாரை வரைந்திருக்கிறார் இந்த ஓவியர் என தெரியுமா?நடிகரும் மக்கள் நீதி மய்யத்திம் தலைவருமான கமலஹாசனின் ஓவியம்தான்.கமலை முத்தத்தால் வரையாமல் எப்படி? வரைவது திரைப்படத்தில் கமலுக்கென ஒரு காட்சி அமைக்காமல் இருக்கமாட்டார்கள் இயக்குனர்கள் அது என்ன காட்சி எல்லோருக்கும் தெரிந்ததுதான் அது தான் முத்தக்காட்சி அதனால் என்னவோ தான் இந்த ஓவியர் முத்தத்தால் கமலை ஓவியமாக வரைந்துள்ளார்.

கமல்

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் UMT ராஜா. தங்க நகை வடிவமைப்பாளரான இவர், கமல்ஹாசனின் தீவிர ரசிகர்.நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு,ஒவ்வொரு முரயும் கமல்ஹாசன் பிறந்த நாளுக்கு இவர் பரிசலிப்பது வழக்கம்.அந்தவகையில் அவருக்கு பரிசளிக்க முத்தங்களால் அவரது ஓவியத்தை உருவாக்கி அசத்தி உள்ளார். உதட்டு சாயத்தை பூசி முத்தமிட்டே நடிகர் கமலஹாசனின் முகத்தை உருவாக்கி உள்ளார்.இவர் உருவாக்கிய ஓவியம் உதட்டால் வரைந்தது போலவே இல்லை.அவ்வளவு அழகாக வரைந்துள்ளார்.

உதட்டோவியம்

இது குறித்து UMT ராஜா கூறுகையில், சுமார் 8 மணி நேரம் செலவளித்து இதனை உருவாக்கி இருப்பதாகவும், வருகின்ற நவம்பர் 7ம் தேதி கமலஹாசனின் பிறந்தநாளில் அவரை சந்தித்து இதனை அளிக்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும் அவரது பெயருக்கு முன் உள்ள UMT என்பதையே கமலஹாசன் நடித்த “உன்னால் முடியும் தம்பி” என்ற படத்தை பார்த்து தான் வைத்துள்ளதாக தெரிவித்தார்.தீவிர கமல் ரசிகரான இவர் கமல் மீது பெரும் பற்று கொண்டவர்.இது போல இவர் கமலுக்கென பல சாதனைகளை புரிந்துள்ளார்.

இதற்கு முன்பே இவர் கமலஹாசனின் பிரந்த நாளுக்காக நீரில் உருவாகும் பாசியில் கமலஹாசனின் உருவத்தை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article

Leave a Reply