கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் நேற்று வரை 63 பேர் பலியாகி இருந்த நிலையில், இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவர் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கள்ளசாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மகேஷ் என்பவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் அருந்தி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 64 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வருவதால் இனி பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.