- கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவ வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை, இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 70 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராயம் விற்பனை செய்தது, மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக 24 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சடையன், வேலு, கவுதம் ஜெயின் ஆகிய மூன்று பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக அவர்கள் தாக்கல் செய்த மனு, நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடைபெற்று வருவதால், ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/girl-rape-case-madras-high-court-orders-transfer-to-cbi/
இதையடுத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை, இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.