ஜூன் 2023 மொத்த ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டை விட 12% வளர்ச்சி!!!

1 Min Read
ஜிஎஸ்டி

2023 ஜூன் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ1,61,497 கோடியாகும்.  இதில் சிஜிஎஸ்டி எனப்படும் மத்திய அரசு ஜிஎஸ்டி ரூ 31,013 கோடி, மாநில அரசு ஜிஎஸ்டி எனப்படும் எஸ்ஜிஎஸ்டி ரூ38,292 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி( ஐஜிஎஸ்டி) ரூ80,292 கோடி .

- Advertisement -
Ad imageAd image

ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ36,224 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ30269 கோடியும் அரசு வழங்கியுள்ளது. வழக்கமான தீர்வுக்குப் பிறகு ஜூன் 2023-ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ 67,237 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ 68,561 கோடியும் ஆகும்.

2023 ஜூன் மாத வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த ஜிஎஸ்டி வருவாயை விட 12% அதிகமாகும்.

நான்காவது முறையாக, மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.60 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜூன் மாதத்தில், ரூ.9600.63 கோடி வசூலாகியுள்ளது. புதுச்சேரியிலிருந்து ரூ 210.38 கோடி வசூலாகியுள்ளது.

Share This Article

Leave a Reply