பிரதமரின கிசான் சம்படா யோஜனாவின் (பி.எம்.கே.எஸ்.ஒய்) தொடர்புடைய திட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு ஆய்வுகளின்படி, அதன் தொடர்புடைய ஆதரவு திட்டங்கள் மூலம் கணிசமான நேரடி / மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில் நபார்டு கன்சல்டன்சி நிறுவனம் நடத்திய பி.எம்.கே.எஸ்.ஒய் கீழ் ஒருங்கிணைந்த குளிர்பதனத் தொடர் மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு திட்டத்தின் மதிப்பீட்டு ஆய்வில், ஒவ்வொரு திட்டமும் சுமார் 600 நேரடி / மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பி.எம்.கே.எஸ்.ஒய் திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட திட்டங்களின் மூலம் சுமார் 9.69 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம், பிரதம மந்திரி நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் ஆகியவை ஒப்பீட்டளவில் புதிய திட்டங்கள் என்பதால், இவற்றிற்கான மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்படவில்லை.
2020-21 முதல் 2024-25 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டுடன் நாட்டில் 2 லட்சம் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை நிறுவுவதற்கான / மேம்படுத்துவதற்கான நிதி, தொழில்நுட்ப மற்றும் வணிக ஆதரவை வழங்குவதற்காக, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. உணவு பதப்படுத்தும் தொழிலின் அமைப்புசாரா பிரிவில் தனிப்பட்ட குறுந்தொழில் நிறுவனங்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதையும், இத்துறையை முறைப்படுத்துவதை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பி.எம்.எஃப்.எம்.இ திட்டத்தின் திறன் மேம்பாட்டுக் கூறுகளின் கீழ், பயிற்சியாளர்கள், மாவட்ட வள நபர்கள், தொழில் முனைவோர் மற்றும் பல்வேறு குழுக்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மானியம் வழங்குகிறது. உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களின் குழுக்களுக்கு வணிகச்சின்னம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவுக்காக 50% வரை மானியம் வழங்கப்படுகிறது.
இத்தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.