அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா ஓபிஎஸ் அணியின் சார்பில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட அந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஓ.பி.எஸ் அணியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சேவல் ஏழுமலை அவர்கள் தலைமையில் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் அந்த பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அன்று நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மருத்துவர் யோகேஸ்வரன் நகர, ஒன்றிய, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏழை எளிய மக்களுக்கு புடவை வழங்குதல் அவர்களுக்கு உணவு வழங்குதல் என நிகழ்வில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. அதேபோன்று ஓபிஎஸ் அணியின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படம் அமைக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பரவலாக பல்வேறு பகுதிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.