- அப்போதைய ஜெயலலிதா வந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது அதையெல்லாம் தற்போது உள்ள திமுக அரசு நிறுத்திவிட்டு குறுநில மன்னர்களை போல் ஆட்சி செய்கிறார்கள் தஞ்சையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி பேச்சு.
தஞ்சையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி தற்போதைய அரசு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் பத்து லட்சம் ராணுவத்தில் உயிரிழந்தால் வெறும் 2 லட்சம் மூன்று லட்சம் தான் மெரினாவில் உயர்ந்தவர்களுக்கு ஐந்து லட்சம் என அறிவித்திருக்கிறார் அதுவும் தற்போது வரை வழங்கப்படவில்லை முதல்வரோ அவரது குடும்பமும் நேரில் சென்று கூட அவர் குடும்பத்தை பார்த்து ஆறுதல் கூறவில்லை.
அவர்கள் குடும்பமே அமர்ந்து கொண்டு விமான கண்காட்சியை பார்த்தது குறுநில மன்னர்களைப் போல ஆட்சி செய்து வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்றால் நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும் நமக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வோம் நமது இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தலாக தான் இருக்க வேண்டும்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/can-govt-aided-courses-in-d-b-jain-college-be-disabled-high-court-order/
பெண்கள் ஏமார்ந்து விடக்கூடாது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பெண்கள் முன்னேற்றத்திற்காக தாலிக்கு தங்கம் மகளிர் மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம் அனைத்து மகளிர் காவல் நிலையம் என பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை வழங்கினார் .
திராவிட முன்னேற்ற கழக ஆட்சி வந்த உடன் அந்த திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டது திட்டத்தைப் பற்றி பெண்கள் அனைத்து குடும்பங்களுக்கும் எடுத்துச் சென்று தேர்தலில் உழைக்க பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.