நடிகர் விநாயகன் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக விநாயகன் நடித்திருந்தார். ரஜினியின் ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற பாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஜெயிலர் படம் பலராலும் பாராட்டப்பட்டது.அந்த படத்தில் அந்த பாத்திரம் தான் திரைக்கதைக்கு முக்கியமான பாத்திரமாக எல்லோருக்கும் பிடித்த பாத்திரம்.தமிழில் திமிரு, மரியான் போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். மலையாளத்தில் வெளியான கம்மாட்டிப்பாடம் படத்துக்காக மாநில அளவில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார்.திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் விநாயகன்.

கடந்த 28 ஆண்டுகாலமாக மலையாள திரை உலகில் நடித்து வரும் நடிகர் விநாயகன் தமிழில் முதல் முறையாக விஷால் நடிப்பில் வெளியான திமிரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சிம்புவின் சிலம்பாட்டம் மற்றும் காலை, கார்த்தியின் சிறுத்தை, தனுஷின் மரியான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.ஜெயிலர் படத்திற்கு பின்னர் இன்னமும் தொடந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் ஜெயிலர் பட வில்லன் விநாயகனை கேரளா போலீசார் திடீரென் கைது செய்தது. மது போதையில் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியை தாக்கியதாக குற்றசாட்டு அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் மலையாள நடிகர் விநாயகன்
இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனது வீட்டில் அதிக அளவு அதிகளவு சத்தம் எழுப்பியதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல் நிலையத்தில் புகார்.

இந்த நிலையில் அதிக மது போதையில் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட விநாயகன் அங்கு காவல் நிலையத்தில் அவரை விசாரணை செய்த அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளை தரக்குறைவாகவும் பேசியுள்ளார்.இதனை அடுத்து விநாயகனை காவல்துறை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டார்.ஜெயிலர் பட வில்லன் நடிகர் இப்படி காவல் துறையினரை தரக்குறைவாக நடந்து கொண்டது எல்லோர் மத்தியிலும் ஒரு முகம் சுளிப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.