காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே 15வயது சிறுமியை மிரட்டி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை வன்புணர்ச்சி செய்த உறவினர்கள் மற்றும் ஐந்து நபர்களுக்கு தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இரண்டு நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், மூன்று நபர்களுக்கு பத்தாண்டு சிறை தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் என்று செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா புத்தளி கிராமத்தில் தாய்,தந்தை இல்லாமல் பாட்டி வீட்டில் வசித்துக் கொண்டு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை மிரட்டி அதே ஊரைச் சேர்ந்த சிறுமியின் உறவினர்கள் ஐந்து பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து , அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் உட்பட சிறுமியின் உறவினர்கள் 5 பேரையும் 2017 ஆம் ஆண்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்தில் பிணையை பெற்று உறவினர்கள் 5 பேரும் வெளியே வந்த நிலையில் , வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி எழிலரசி முன்பு வாதிடப்பட்டு வந்த நிலையில் , அரசு வழக்கறிஞர் புவனேஸ்வரி குற்றத்தினை சாட்சியின் அடிப்படையில் ஆதாரங்களோடு நிரூபித்த காரணத்தால் சிறுமியின் உறவினர்கள் ஐந்து பேருக்கும் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி புத்தளி கிராமத்தைச் சேர்ந்த முருகனுக்கு பத்து வருட சிறை தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் , கிருஷ்ணன் மற்றும் சுப்பராயன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், திருநாவுக்கரசு மற்றும் தாமஸ் என்கின்ற ராமச்சந்திரன் ஆகியோருக்கு பத்து வருடம் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார் .
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ஏற்கனவே மூன்று லட்ச ரூபாய் வழங்கிய நிலையில், தற்பொழுது மேலும் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கை சிறப்பாக கையாண்ட காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரை மாவட்ட எஸ்.பி சுதாகர் வெகுவாக பாராட்டினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.